பொதுவாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பதுதான் பலரது விருப்பமாக இருக்கும். இருந்தாலும் விசா நடைமுறைகளுக்காக கட்டணம் செலுத்தி அதனை முடித்து விசா பெறுவது என்பது பெரிய வேலையாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் தங்களுடைய வெளிநாட்டு சுற்றுலா பயண கனவுகளை தவிர்த்து விடுவார்கள்.ஆனால் பல்வேறு நாடுகளும் இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாமலேயே அனுமதி அளிக்கின்றன. அந்த வகையில் இந்தியர்கள் விசா இன்றி பயணம் செய்யக்கூடிய 10 நாடுகளின் பட்டியலை நாம் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
தாய்லாந்து: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருக்கும் ஒரு மிகச்சிறந்த சுற்றுலாவுக்கு உகந்த நாடு தான் தாய்லாந்து. இங்கே இருக்கும் அழகிய கடற்கரைகள், இந்த மக்களின் கலாச்சாரம் மற்றும் ருசியான உணவு ஆகியவற்றை அனுபவிக்க விரும்புபவர்கள் இந்தியாவில் இருந்து விசா இல்லாமலேயே தாய்லாந்துக்கு பயணம் செய்ய முடியும். இந்த வாய்ப்பு வரும் நவம்பர் 11ஆம் தேதி உடன் முடிவடைகிறது. எனவே தாய்லாந்து செல்ல வேண்டும் என நினைப்பவர்கள் வரும் நவம்பர் 11 ஆம் தேதிக்குள் விசா இன்றி பயணம் செய்யலாம் .
மலேசியா: இந்தியர்கள் அதிகம் வசிக்கும் ஒரு நாடு தான் இது. பெட்ரோனஸ் டவர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் நிரம்பிய ஒரு நாடு. மலேசியாவிற்கு வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும். கத்தார்: தோஹா நகரின் அழகை ரசிக்கவும் வானுயர கட்டிடங்களின் மேல் நின்று உலகின் அழகை பார்க்கவும் விரும்புபவர்கள் நிச்சயமாக கத்தாருக்கு செல்லலாம். இங்கே 30 நாட்கள் வரையிலான திட்ட பயணங்களுக்கு இலவச விசாவில் பயணம் செய்ய முடியும்.
இலங்கை: நமது அண்டை நாடான இலங்கையில் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆறு மாத காலத்திற்கு இந்தியர்கள் விசா ஏதும் இன்றி இலவசமாக பயணம் செய்ய முடியும். இலங்கையில் இந்தியர்கள் சுற்றுலா செல்ல வேண்டிய பல்வேறு அழகான இடங்கள் இருக்கின்றன.
செச்சல்ஸ்: மிக அழகிய கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் சார்ந்த ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என விரும்புபவர்கள் நிச்சயமாக செல்லலாம். இங்கே 30 நாட்களுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
மக்காவ்: சீனாவின் கட்டுக்குள் இருக்கும் ஒரு நாடு இது. இந்த நாட்டிற்கும் இந்தியர்கள் இலவச விசாவில் பயணம் செய்ய முடியும். பூடான்: நமது மற்றொரு அண்டை நாடான பூடான் ஆன்மீக சுற்றுலா செல்வதற்கு ஏற்ற நாடாக இது கருதப்படுகிறது. இங்கே 14 நாட்களுக்கு விசா இல்லாமல் இந்தியர்கள் பயணம் செய்ய முடியும்.
நேபாளம்: இந்தியர்களுடன் பல்வேறு கலாச்சார தொடர்பு கொண்டுள்ள ஒரு நாடு தான் நேபாளம் .இந்தியர்கள் நேபாளத்திற்கு செல்வதற்கு விசா தேவை இல்லை. மொரீஷியஸ்: அழகான கடற்கரைகள், ஆடம்பர தங்குமிடங்கள் ,ருசிகரமான உணவுகள் உள்ளிட்டவற்றை அனுபவிக்க விரும்புபவர்கள் இங்கே செல்லலாம் . இந்தியர்கள் 90 நாட்கள் வரை விசா இன்றி இங்கே பயணம் செய்யலாம் . எல் சால்வடார்: மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாருக்கு இந்தியர்கள் 180 நாட்கள் வரையிலான பயணங்களை விசா இல்லாமல் மேற்கொள்ளலாம்.