தமிழ்நாட்டில் பைப் மூலம் வீட்டிற்கே கேஸ் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டமாக சென்னையில் இந்த திட்டம் கொண்டு வரப்படும். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அதிகாரிகள் கடைசி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன . அடுத்த சில வாரங்களில் இது தொடர்பான முக்கியமான அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
உங்கள் வீடுகளில் சமையல் அறைகளில் குழாய் மூலம் எரிவாயு இணைப்புகளைப் பெற முடியும் என்று சொன்னால்.. கேட்கவே வியப்பாக இருக்கிறது அல்லவா.. சென்னையில் அது வெகுவிரைவில் நிஜமாக போகிறது. சென்னையில் உள்ள குடியிருப்புகளில் இதற்கான ரிஜிஸ்டிரேஷன் தொடங்கி உள்ளது. இதுவரை 30000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தலா 576 செலுத்தி PNGக்கு பதிவு செய்துள்ளன.
இந்த வருட இறுதிக்குள் சென்னையில் இது விரைவில் நடைமுறைக்கு வரும். இதற்கான பணிகள் சென்னையில் உள்ள குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள வீடுகளுக்கு PNG அல்லது பைபர் இயற்கை எரிவாயு எனப்படும் பைப் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு வழங்குவதற்கு தமிழக அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. எண்ணூரில் உள்ள சிஎன்ஜி அல்லது சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையத்தில் இருந்து பைப்லைன்கள் அமைப்பதற்கான அனுமதிகளை ஏற்கனவே சாலை போக்குவரத்து துறையிடம் வாங்கி உள்ளனர். சென்னையில் பிஎன்ஜியின் முதல் வாடிக்கையாளர்களாக திருமங்கலம் அருகே உள்ள மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்பாக இருக்கும் எனத் தகவல்கள் வருகின்றன. சிஎன்ஜி திட்டத்தை செயல்படுத்துவதை மேற்பார்வையிட தொழில் துறை பெரிய உதவிகளை வழங்கி வருவதாகவும் மேலும் ஒரு நோடல் ஏஜென்சியும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னையிலும், திருவள்ளூரிலும் சுமார் 666 கி.மீ தூரத்துக்கு தனியார் நிறுவனம் மூலம் பாதைகள் அமைக்கப்படும் என்றும் எண்ணெய் துறையைச் சேர்ந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தண்ணீர், கழிவுநீர், மின்சாரம், இன்டர்நெட், தொலைபேசி இணைப்புகள் போன்ற முக்கியப் பாதைகள் சென்னை நகரச் சாலைகளின் கீழ் இயங்குவதால் இந்த பணிகள் மிகவும் கடினமான இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றன. அடுத்த 4 ஆண்டுகளில், சென்னை மற்றும் திருவள்ளூரில் சுமார் 33 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு PNG இணைப்புகள் வழங்கப்படும். மெயின் லைன் மணலி வழியாக ஜவஹர்லால் சாலை வழியாகச் சென்று, மாதவரம் வட்டம் கத்திப்பாராவை அடைந்து பின்னர் மீனம்பாக்கம் வரை செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. குடியிருப்பு இடங்களில் கிளை வழிகள் வழியாக இதற்கான சாலைகள் அமைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. PNG இணைப்புகள் LPG ரெட்டிகுலேட்டட் இணைப்புகளில் கொடுக்கப்பட்டதைப் போலவே இருக்கும். மின்சாரம் போல வீடுகளில் ரெகுலேட்டரை திருகினாள் கேஸ் கிடைக்கும். இதற்கு மீட்டர் பொருத்தப்பட்டு அதன் அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சேவைகள் சிலிண்டர்கள் இருக்காது. ஆரம்ப புக்கிங் கட்டணத்தை வசூலித்த பிறகு நிறுவனம் 90 நாட்களுக்குள் PNG இணைப்புகளை வழங்கப்படும்.. PNG அடுப்புகளுக்கு பெரிய முனைகளுடன் கூடிய பெரிய விட்டம் கொண்ட பர்னர்கள் தேவைப்படும். இப்போது நுகர்வோர் PNG இணக்கமான அடுப்புகளுக்கு மாற (பெட்ரோலியம் பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கத்தால்) வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இப்போது உள்ள சிறிய அடுப்புகள் பலன் அளிக்காது. ஏற்கனவே சென்னை மற்றும் திருவள்ளூரில் அமைக்கப்பட்டுள்ள 222 சிஎன்ஜி விற்பனை நிலையங்களில் 70 செயல்பட ஆரம்பித்து, தினமும் சுமார் 6800 வாகனங்களுக்கு சுமார் 10000 கிலோ சிஎன்ஜி சப்ளை செய்யப்படுகிறது. சென்னையில் உள்ள குடியிருப்புகளில் இதற்கான ரிஜிஸ்டிரேஷன் தொடங்கி உள்ளது. இதுவரை 2000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தலா ₹ 576 செலுத்தி PNGக்கு பதிவு செய்துள்ளன. இதற்கான பைப்லைன் அமைக்கும் பணி தொடங்கும் போது,அதிகமான குடியிருப்பாளர்கள் பதிவு செய்வார்கள் என குடியிருப்போர் நலச் சங்கங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தற்போது,கேளம்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரியில் உள்ள எல்சிஎன்ஜி நிலையம் ஆகிய இடங்களில் உள்ள டிசி யூனிட்கள் மூலம் எரிவாயு வழங்கப்படுகிறது. நிறுவனம் குழாய் பதிப்பதில் அதிக முன்னேற்றம் அடைந்தவுடன், இணைப்புகளை வழங்குவது வேகமாக இருக்கும். அதேபோல் துணை கேஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு கேஸ் வேகமாக, எளிதாக வழங்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது